செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராக எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு திட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இரகசியமான வகையில் கையொப்பங்களை பெறும் நடவடிக்கையில் குறித்த எம்.பிக்கள் குழு ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

19வது திருத்தத்தை நிறைவேற்றிய பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு செய்யாது இருக்கும் வகையிலேயே இந்த பிரேரணையை கொண்டு வரும் முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிய வருகின்றது.

குறிப்பாக பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கினரின் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கைளிக்கப்பட்ட பின்னர் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.