செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல்: 70 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில்

ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்புக் கடமையில் கூமார் 70 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுமார் 66 ஆயிரம் பொலிஸாரும், 5 ஆயிரம் விஷேட அதிரடிப்படையினரும் இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  இதனைவிட முப்படையினரும் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் நா?டு முழுவதிலும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

நாடுமுழுவதிலும் 12,252 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு இடம்பெறும்.  வாக்கு எண்ணும் நிலையங்களின் பாதுகாப்பு அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.