செய்திகள்

ஜனாதிபதியாக இருந்தவர் பிரதமராக எண்ணுவது வெட்ககேடான செயல்: பௌசி

நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தவர் பிரதமராக வரவேண்டும் என கூறுவது வெட்ககேடான விடயம் என அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளது.

இதேவேளை அவரை பிரதமராக்க வேண்டுமென கூறி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல வெளியில் இருக்கும் அரசியிலில் ஓரங்கட்டப்பட்ட குழுவினரே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்பட்ட சிலர் இருந்துக்கொண்டு மஹிந்தவின் தோலில் தொங்கி அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். இவர்களே ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இவர்களின் பேச்சுக்கு கட்சிக்குள் சிலரும் ஏமாந்துள்ளனர்.

நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பிரதமராக வேண்டும் என்பது வெட்காமான ஒன்று. பிரதமரான பின்னர் பாராளுமன்றத்துக்கு ஜனாதிபதி வரும் போது மஹிந்த எழுந்து நின்று மரயாதை செலுத்த வேண்டும் அதற்கு அவர் தயாரா என கேட்கின்றேன். என பௌசி தெதரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்;துள்ளார்.