செய்திகள்

ஜனாதிபதியாக இருந்த மஹிந்தவுக்கு எம்.பியாக வேண்டுமென மண்டைக் குழப்பம் இருக்காது : ராஜித சேனாரட்ன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு மண்டை கோளாறு இருக்குமென நம்பவில்லையென அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது மஹிந்த ரராஜபக்‌ஷ தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளும் அமைச்சரின் பதில்களும் வருமாறு,
கேள்வி – மஹிந்த ராஜபக்ஷ  அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வந்தால்..?
பதில் – இயலாமல் வர மாட்டார். இயன்றால் தானே வருவார்.
கேள்வி – வரமாட்டார் என்று நம்பிக்கையா?
பதில் – ஜனாதிபதியாக இருந்துவிட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக ஆகும் அளவிற்கு அவருக்கு மண்டைக் குழப்பம்  இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
கேள்வி – அவர்  போட்டியிட மாட்டார் என நீங்கள் கூறுகிறீர்களா?
பதில் – ஆம் . ஆனால் அவ்வளவு பிரச்சினை இருக்கும் என்று நான் நம்பவில்லை. பாராளுமன்ற உறுப்பினராக வரும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு மனநோய் இருப்பதாக தெரியவில்லை. அனைத்து பாதுகாவலர்களையும் விலக்கி இரண்டு பேருடன் மாத்திரம் வீதியில் செல்ல அவர் விரும்புவாரா என கேட்கின்றேன்.  ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினராக விரும்புவாரா? நான் பிரதேச சபை உறுப்பினராக விரும்புவேனா? இல்லை. அதுபோலதான் இதுவும்.