செய்திகள்

ஜனாதிபதியின் கூட்டத்தில் நாமலின் மெய்பாதுகாவலர் துப்பாக்கியுடன் பிடிபட்டார்

ஜனாதிபதியின் கூட்டத்தில் நாமலின் மெய்பாதுகாவலர் துப்பாக்கியுடன் பிடிபட்டார். ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபெல்லஸ்ஸ எனும் இடத்தில் நடந்த கூட்டமொன்றில் இச்சம்மபவம் நடந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த பிரதேசத்தில் கூட்டமொனறில் கலந்துகொண்டபோது சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த நபர் ஒருவரை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு விசாரித்துள்ளது. இதன்போது குறித்த நபரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

விசாரித்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர் என தெரியவந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவையென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.