செய்திகள்

ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்;தல் : ராஜித

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பில் குறைப்படுகள் இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரவித்துள்ளார்.
பல வருடங்களுக்கு முன்னர் காமினி திஸாநாயக்கவின் கூட்டத்தின் மீது நீண்ட நாட்களக காத்திருந்து பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகளை அறிந்து தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்தார். இந்நிலையில் இதேபோன்று  ஜனாதிபதி மைத்திரியின் பாதுகாப்பு குறைபாடுகளை அறிந்து இது போன்ற நபர்கள் செயற்பட வாய்ப்புண்டு.
அகுணுபெலஸ்ஸ பகுதியில் ஜனாதிபதியின் கூட்டத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் நுளைந்தது பாதுகாப்பு குறைப்பாடுகளையே எடுத்துக்காட்டுகின்றது. என அவர் தெரிவித்துள்ளார். நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.