செய்திகள்

ஜனாதிபதியின் பொதுமன்னில் 89 கைதிகளுக்கு விடுதலை!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 89 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய சிறைக் கைதிகள் தினத்தையொட்டி இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சிறிய குற்றங்கள் தொடர்பில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹர, வெலிக்கடை, போகம்பரை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் இருந்தே இந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
-(3)