செய்திகள்

ஜனாதிபதியின் வெளிவிவகார ஆலோசகராக ஜயந்த தனபால நியமனம்

இலங்கையின் சிரேஷ்ட ராஜதந்திரியான கலானித்து ஜயந்த தனபால ஜனாதிபதியின் வெளிவிவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஐக்கியநாடுகள் சபையில் மிக உயர்ந்த பதவிகளை வகித்த ஜயந்த தனபால அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றகாலத்தில் அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளராக பதவிவகித்தார்.

பிரிட்டன், சீனா, அமெரிக்கா , இந்தியா மற்றும் சுவிஸ்சர்லாந் ஆகிய நாடுகளிலும் இலங்கையின் ராஜதந்திரியாக பணியாற்றியிருக்கிறார்.