செய்திகள்

ஜனாதிபதி – அங்கஜன் இன்று சந்திப்பு!

யாழ்ப்பாண நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்.மாவட்ட ஸ்ரீலங்கா சதந்திரக்கட்சி அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனை அழைத்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதிக்கும் அங்கஜனுக்கும் இடையில் இது தொடர்பான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் குடாநாட்டில் சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்பி அதனை வலுப்படுத்துவது தொடர்பாக இதன் போது ஆராயப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய வேட்பாளராக அங்கஜன் இராமநாதன் நிறுத்தப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை முன்னிலைப்படுத்தி குடாநாட்டில் சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் தற்போது ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே இன்றைய சந்திப்பு நடைபெறவுள்ளது.