செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி அமர்வு இன்றும்

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய மூன்றாம் நாள் அமர்வுகள் இன்று கண்டாவளையில் இடம்பெறவுள்ளன.

இன்றைய சாட்சி விசாரணைகளுக்காக 240 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய முறைப்பாடுகளும் மக்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

நேற்று இடம்பெற்ற அமர்வில் 220 பேரிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டதுடன், காணாமற்போனோர் தொடர்பில் புதிதாக 64 முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ள சாட்சி விசாரணைகளுக்கு, தூர இடங்களிலிருந்து வருவோருக்கான விசேட பஸ் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுகளில் காணாமற்போனோர் தொடர்பில் இறுதிக்கட்ட சாட்சி விசாரணைளை ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.

n10