செய்திகள்

ஜனாதிபதி கலந்துக்கொண்ட கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற நபர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்ட கூட்டமொன்றில் துப்பாக்கியுடன் சென்ற இராணுவ கோப்றால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிகின்றார்.

சந்தேகநபரை அகுனகொலபெலஸ்ஸ நீதவான் முன்னிலையில் நேற்றிரவு ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் பாதுகாப்பு பிரிவு உத்தியோகஸ்தர் என தெரிவித்து, குறித்த கூட்டத்திற்கு சென்றிருந்த சந்தேகநபரை, பரிசோதனைக்கு உட்படுத்திய போதே  துப்பாக்கி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.