செய்திகள்

ஜனாதிபதி சிறிசேனவின் சகோதரர் ஆபத்தான நிலையில்

கோடரியால் தாக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று வரும் ஜனாதிபதி சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவரை தாக்கினார் என்று கருதப்படும் சந்தேக நபர் பக்கமுன பொலிஸில் சரண் அடைந்துள்ளார். இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்றும் பொலனறுவ பொலிசார் தெரிவித்தனர்.