செய்திகள்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 38 பேர் கைது!

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அமைதியற்ற வகையில் நடந்துகொண்ட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் சங்கங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த ஆர்ப்பாட்டத்தில் அமைதியற்ற வகையில் நடந்துகொண்டதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடையே 13 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். -(3)