செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் யாழ். செயலகத்தில் அபிவிருத்திக் குழு கூட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மணியளவில் யாழ் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு இன்று காலை வருகை தந்துள்ள புதிய ஐனாதிபதியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மாலை அணிவித்து வரவேற்றார்.

இதனையடுத்து யாழ். செயலகத்தில் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

04