செய்திகள்

ஜனாதிபதி திடீர் யாழ். விஜயம்: முதலமைசர் வரவேற்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மகளீர்விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.

யாழ்ப்பாணத்தில் யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு புங்குடுதீவு மாணவியின் படுகொலை மற்றும் நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ஆராயவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை எதிர்பாராத வகையில் ஜனாதிபதி சந்திக்கின்றார். இதன்போது, மாகாண சபையின் செயற்பாடுகளில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் தொடர்பாகவும் பேசப்படும்.

01