செய்திகள்

ஜனாதிபதி நாளை இரவு சிறப்புரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சகல இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவும் நாளை வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்கு சிறப்புரையாற்றவுள்ளார்.

அரசாங்கம் பதவியேற்ற நூறு நாள் நாளையுடன் நிறைவடைகின்றது. இதனையிட்டும் 19 வது திருத்தச் சட்மூலம் தொடர்பில் உருவாகியுள்ள நெருக்கடிகள் குறித்தும் இந்த உரையின் போது அவர் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.