செய்திகள்

ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கம்மன்பிலவினால் முறைப்பாடு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அகியோருக்கு எதிராக பிவித்துர ஹெல உறுமய கட்சியின் செயலாளரான மேல் மாகண சபை உறுப்பினர் உடய கம்மன்பிலவினால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணணக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே  ஊழலாக கருதும் வகையிலான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தே அவர் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 2014 நவம்பர் 21ம் திகதி ஊடக சந்திப்பு நடத்தி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  தான் ஜனாதிபதியானால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவேன் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
1981 இலக்கம் 15 என்ற ஜனாதிபதி சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் தனது வெற்றியை உறுதி செய்து கொள்ளவென பதவி வழங்க வாக்குறுதி அளிப்பதுஇ மற்றும் பதவிகள் பெற்றுக் கொள்வது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு என  தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ள உதய கம்மன்பில  இது தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.