செய்திகள்

ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டும் என்றுதான் நானும் மகிந்தவும் வாக்கு கேட்டோம்

ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டும் என்றுதான் நானும் மகிந்தவும் வாக்கு கேட்டோம்.

நிறைவேற்று அதிகார முறை முறையை ஒழிக்கவேண்டும் என்றுதான் நானும் மகிந்தவும் வாக்கு கேட்டோம்.

மக்கள் அந்த வாக்குறுதிக்கு த்தான் வாக்களித்தார்கள். ஒரு நாடு கறுப்பா வெள்ளையா என்பது முக்கியமில்லை, லஞ்சம் ஊழல் துஷ்பிரயோகம் இல்லாத நாடாக இருப்பதே முக்கியம்.

சர்வதேசத்தின் உதவியுடன் லஞ்சம் ஊழல் இல்லாத நாடாக இலங்கையை மாற்றியமைக்க தற்போது சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் 19ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்து நாட்டை முன்னேற்றுவோம்.

நாட்டு மக்களின் நலன் கருதி இன்று சமர்ப்பித்துள்ள 19ஆவது திருத்தச்சட்டத்துக்கு விவாதித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் பாராளுமன்றில் உரையாடும்போது தெரிவித்தார்.

19ஆவது திருத்தச்சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு பேசினார்.