செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால இன்று புத்தகாயா, திருப்பதிக்கு விஜயம்

இந்தியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆந்திராவிலுள்ள திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வரர் தேவஸ்தானத்தை வழிபடவுள்ளார்.

இன்று காலை இந்திய பீஹார் மாநிலத்திலுள்ள பெளத்தர்களின் புனிதத் தல மான புத்த கயாவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி புத்தகாயாவைச் தரிசித்த பின் புத்த பகவான் ஞானம்பெற்ற மஹாபோதி விஹாரைக்கும் செல்லவு ள்ளார்.

அதனையடுத்து திருப்பதிக்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏழுமலையான் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் தேவஸ்தானத்திற்கு சென்று அங்கு நடைபெறவுள்ள விஷேட வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

அதனையடுத்து நாளை புதன்கிழமை கொச்சின் விமான நிலையத்திலிருந்து அவர் இலங்கைக்குத் திரும்பவுள்ளார்.