செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் ஈ.பி.டி.பியின் பிரதிநிதிகள் சந்திப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதி அவர்களின் வாசஸ்தலத்தில் மேற்படி சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது எமது மக்கள் முகங்கொடுத்து வருகின்ற நாளாந்த பிரச்சினைகள் மற்றும் சமகால, எதிர்கால அரசியல் நிலவரங்கள் என்பன குறித்து பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களை தொடர்ச்சியாக சந்தித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்டப் பிரதிநிதிகள் இன்றைய தினமும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் 16 கோரிக்கைகள் முன்வைத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையிலான இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா,  செயலாளர் நாயகத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.