செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி இந்திய மீனவர்களின் படகுகளை ஒப்படைக்க தீர்மானம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இந்திய மீனவர்களின் படகுகளை ஒப்படைக்க தீர்மானித்திருக்கிறார் எனத் தெரியவருகிறது.

இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களின் 86 படகுகளை விடுவிக்க புதிய அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதான மீனவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை. காரைநகர், காங்கேசன்துறை, தலைமன்னார், திருகோணமலை ஆகிய துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படகுகளை விடுவிக்குமாறு இந்திய மீனவர்கள், மத்திய, மாநில அரசுகளிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், அவை விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது – என்று மீனவர் கூட்டமைப்பை ஆதாரமாகக் கொண்டு இந்திய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.