செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி நாளை லண்டன் பயணம்: மகாராணியையும் சந்திப்பார்

பொதுநலவாய தின வரவேற்பு வைபவத்தில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை சனிக்கிழமை பிரிட்டனுக்கு பயணமாகவுள்ளார். பொதுநலவாய அமைப்பின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வைபவத்தில் பங்குபற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா, பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்குபற்றுகின்றனர். இவ்வைபவத்தில் பங்குபற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் விசேட பகல் போசன விருந்துபசாரமும் அளிக்கவுள்ளார்.

லண்டனில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இந்த நிகழ்வில் பங்கேற்பார் எனத் தெரிகின்றது.