செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி எமக்கு அநீதியிழைத்துவிட்டார்: ஹக்கீம் குற்றச்சாட்டு

சிறிய மற்றும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கு அநீதி இழைக்க இட­ம­ளிக்­கப்­ப­ட­ மாட்­டாது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்த போதிலும் எமது ஆலோ­ச­னை­க­ளை நிரா­க­ரித்து வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யிட்­டிருப்­பதன் மூலம் அவர் எமக்கு அநீ­தி­யி­ழைத்­து­விட்டார் என்று அமைச்­சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் குற்றம் சுமத்­தினார்.

அமைச்­ச­ர­வையில் எமது குரல்கள் அடக்­க­ப்ப­டு­கின்­றன. புதிய தேர்தல் முறை விட­யத்தில் சர்­வா­தி­கா­ரமும் தான் தோன்­றித்­த­ன­மான போக்­குமே கடைப்­பி­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­ப­தியோ பிர­த­மரோ தங்­க­ளது கட்­சி­களை பற்றி சிந்­திக்­கின்­ற­னரே தவிர சிறிய, சிறு­பான்மை கட்­சி­களைப் பற்றி சிந்­திக்­க­வில்லை. இதே­நேரம் புதிய தேர்தல் முறையை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்கும் சிறு­பான்­மை­யி­னரின் கருத்­துக்­க­ளையும் குறிப்­பாக என்­னையும் விமர்­சிப்­ப­தற்கு சில இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் குத்­த­கைக்கு அமர்த்­தப்­பட்­டது போன்று செயற்­ப­டு­கின்­றன என்றும் அவர் குறிப்­பிட்டார்.

மேலும் பிர­த­ம­ரி­னது கையா­ளாக நான் செயற்­ப­டு­வ­தாக விமர்­சிக்­கின்­றனர். குற்றம் சாட்­டு­கின்­றனர். அவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்­கான தேவை எனக்­கில்லை. அவர் மீதும் எனது விமர்­சனம் இருக்­கி­றது. இவ்­வி­டை­யத்தில் அவ­ரது நோக்கம் வேறு எனது நிலைப்­பாடு வேறு என்­பதை தெரி­வித்­துக்­கொள்­கிறேன் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இரண்­டா­வது நாளா­கவும் இடம்­பெற்ற புதிய தேர்தல் முறைமை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அமைச்சர் ஹக்கீம் இங்கு மேலும் கூறு­கையில்:

“புதிய தேர்தல் முறைமை என்­ற­தான 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்பில் சிறிய சிறு­பான்மைக் கட்­சிகள் தொடர்ச்­சி­யாக தமது கருத்­துக்­க­ளையும், விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்து வரு­கின்­றன. அந்த வகையில் நேற்­றை­ய­தினம் (நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை) தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மற்றும் ஜன­நா­யக தேசி­யக்­கூட்­ட­ணியின் அனு­ர­கு­மார திசா­நா­யக்க ஆகிய உறுப்­பி­னர்கள் முன்­வைத்­தி­ருந்­தனர்.

அனு­ர­கு­மார திசா­நா­யக்க எம்பி தனது உரை­யின்­போது மேற்­படி 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான அமைச்­ச­ரவை உப­கு­ழுவை விமர்­சித்த அவர் அக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை “சமை­ய­லறை சர்­வா­தி­காரம்” என்று விளித்­தி­ருந்தார் இதனை மறுப்­ப­திற்­கில்லை.

சிறிய மற்றும் சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கு 20 வது திருத்தம் எந்­த­வ­கை­யிலும் பாதிப்­பாக அமை­யாது என்றும் சிறு­பான்மை மக்­க­ளுக்கு புதிய தேர்தல் முறை­மையில் அநீ­தி­யி­ழைக்க இட­ம­ளிக்க மாட்டேன் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்தார்.

ஆனாலும் சிறு­பான்மை மற்றும் சிறு­கட்­சி­களின் ஆலோ­ச­னைகள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. எமது நிலைப்­பா­டு­களை பரீ­சி­லிக்­கவும் இல்லை. எனினும் எமது கருத்­துக்­க­ளையும் நிலைப்­பா­டு­க­ளையும் இடது சாரிகள் ஏற்­றுக்­கொண்­டதை போன்று மாது­லு­வாவே சோபித்த தேரரும் ஏற்­றுக்­கொண்­டுள்ளார்.

நான் அமைச்­ச­ர­வையில் இருப்­பதால் பிர­த­மரின் கையா­ளாக செயற்­ப­டு­வ­தாக என்­மீது குற்றம் சுமத்தி விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­றனர். நான் அவ்­வாறு பிர­த­மரின் கையா­ளாக செயற்­ப­ட­வேண்­டிய தேவை எனக்­கில்லை.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இலக்கு வேறு எமது நிலைப்­பாடு வேறு. அவ­ரது நகர்­வுகள் குறித்து நான் அறிந்து வைத்­தி­ருக்­கிறேன். அத்­துடன் அவர் மீதும் எனக்கு விமர்­சனம் உள்­ளது. பிர­த­மரைப் பொறுத்­த­வ­ரையில் அவ­ருக்கு அவ­ரது கட்­சியின் அதி­கா­ரத்தை தக்க வைத்­துக்­கொள்­வதே பிர­தா­ன­மா­ன­தாகும். அதே­போன்று தான் ஜனா­தி­ப­தியும் செயற்­பட்டு வரு­கிறார்.

நாட்டின் ஏழு மாகா­ண­ங­களில் இருந்து போது­மான ஆச­னங்­களை பெற்று அடுத்த ஆட்­சியை கைப்­பற்றிக் கொள்­வதே இவர்­களின் பிர­தான இலக்­காக இருக்­கின்­றது. இவ்­வாறு சிந்­திப்­ப­வர்­க­ளுக்கு வடக்கு கிழக்கு மக்கள் குறித்தோ சிறிய சிறு­பான்மைக் கட்­சிகள் குறித்தோ சிந்­த­னை­யில்லை.

சிறிய சிறு­பான்மைக் கட்­சி­களால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னைப்­பற்றி ஆராய்­வ­தற்கு தயா­ரில்­லாத நிலைமை காணப்­பட்­டது. இது வரை­யி­லான காலப்­ப­கு­தி­களில் கொண்டு வரப்­பட்ட தேர்தல் மாற்­றங்­க­ளின்­போது தற்­போது மாதி­ரி­யான சர்­வா­தி­கா­ரப்­போக்கு கடைப்­பி­டிக்­கப்­பட்­டது கிடை­யாது.

இரட்­டை­வாக்குச் சீட்டு முறைமை உள்­ளிட்ட எமது யோச­னை­களை சகல தரப்­பி­ன­ரு­டனும் கலந்து பேசி அதன்­பின்னர் வர்த்­த­மா­னியில் அறி­விக்க முடியும் என்ற யோச­னையை நாம் ஜனா­தி­ப­தி­யிடம் முன்­வைத்­தி­ருந்தோம். ஆனால் அது ஏற்­கப்­ப­ட­வில்லை. சிறிய சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கும் மக்­க­ளுக்கும் அநீ­தி­யி­ழைக்­கப்­ப­ட­மாட்­டாது என்று ஜனா­தி­பதி கூறி­யி­ருந்த போதிலும் மேற்­படி 20ஆவது திருத்தம் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டதன் மூலம் ஜனா­தி­பதி சிறு­பான்மை மக்­க­ளுக்கு அநீதி இழைத்து விட்டார்.

எனவே எமது ஆலோ­ச­னை­களை பெறாது பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்தல் மீளப்­பெ­றப்­ப­ட­வேண்டும். ஏனெனில் இத்­தி­ருத்­தத்தின் மீது எமக்கு எந்­த­வி­த­மான நம்பிக்கையும் கிடையாது. இதேபோன்று தான் 19ஆவது திருத்ததிலும் எமது யோசனைகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த புதிய முறை தேர்தலானது அர்த்தமற்றதாகும்.

1. இப்புதிய முறை தேர்தலானது வாக்களிப்பவர்களுக்கும் விளக்கமில்லாதுள்ளது. அதேபோன்று சட்ட வல்லுனர்களும் விளங்காதுள்ளது. வாக்காளன் என்பவன் தான் அளிக்கும் வாக்கு தொடர்பில் தெளிவுபெற்றிருப்பது மிகவும் அவசியமாகும். இதன் பெறுபேறுகள் எப்படியானதாக இருக்கும் என்று தெரியாது. அவ்வாறான தேர்தல் முறைமையொன்று இவ்வாறு அவசர அவசரமாக கொண்டு வருவதற்கான தேவை என்ன என்பதே எமது கேள்வியாகும் என்றார்.