செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி நாடு திரும்பினார்

பாகிஸ்தானுக்கான இருநாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடு திரும்பினார்.
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் மூலம் நேற்று இரவு 9.40 மணியளவில் நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கியமான ஒப்பந்தங்கள் சில மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.