செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி – முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவிருக்கின்றது.

ஒன்பது மாகாண முதலமைச்சர்களுடனான மாநாடு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவிருக்கின்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொள்ளவிருக்கின்றார்.

இந்த மாநாட்டையடுத்து வடக்கு முதலமைச்சருடன் ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் பேச்சுக்களை நடத்தவிருப்பதாக முதலமைச்சருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்போது, வடமாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் முதலமைச்சர் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவருவார் எனத் தெரிகின்றது.