செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி விரைவில் அமெரிக்கா செல்வார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் காலங்களில் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரி க்காவுக்கு விஜயம் செய்வாராயின் இலங்கை ஜனாதிபதி ஒருவர் 31 வருடங்களுக்கு பின் அமெரிக்கா விஜயம் செய்வது இதுவாகும்.

அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்ட் ரீகன் இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன 1984ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப் பிடத்தக்கது.

இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திரமோடி அடுத்த மாதம் 13 ஆம் திகதி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இந்திய பிரதமர் ஒருவர் 1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங் கைக்கு விஜயம் மேற்கொள்வதும் குறிப் பிடத்தக்கது.