செய்திகள்

ஜனாதிபதி விசேட செயலணி உறுப்பினர்களுக்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தலைமையில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி விசேட செயலணி உறுப்பினர்களுக்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற தூதுவர்கள் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் வழங்கும் அர்ப்பணிப்பு மிகுந்த சேவையை பாராட்டவதாக தெரிவித்தனர்.அத்துடன் எதிர்கால நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.(15)