செய்திகள்

ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை ஆரம்பம்: கிழக்கில் இன்று இரண்டு உடல்கள் அடக்கம்

கொரொனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தில் இன்று காலை இரண்டு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இரணைதீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் நடவடிக்கைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்கு அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட  இடத்தில்  அதனை அடக்கம் செய்ய இப்போதைக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. -(3)