செய்திகள்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமும், டெல்லியில் மிதமான நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, அந்நாட்டை உருகுலைத்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக பலியாகினர்.

அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் அடிக்கடி மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதன் தாக்கம் இந்தியாவிலும், டெல்லி, பீகார், உத்தரபிரதேசம் போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை ஜப்பானின் போனின் தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், ஜப்பானின் சசி-ஷிமாவில் இருந்து 189 கி.மீ. தூர பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோதும், ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக டெல்லியிலும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் உள்ளவர்கள் பதறியடித்து வெளியே ஓடிவந்தனர்.