செய்திகள்

ஜப்பான் கடலோரப் பகுதிகளைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான் கடற்பகுதியில் 6.8 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

ஜப்பானிற்கு வடகிழக்கே கடற்பகுதியில் 6.8 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

சேதம் குறித்தும் உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஹோன்சு தீவு அருகே கடற்பகுதியில், 38.9 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது என்றும் தெரிவித்து உள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அலைகள் தாக்கியது.

இச்சம்பவத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக, புகுஷிமாவில் பாதிப்பு ஏற்பட்டு, கதிரியக்க கசிவும் ஏற்பட்டது.