செய்திகள்

ஜப்பான் பணயக்கைதிகளை கொலைசெய்யப்போவதாக எச்சரிக்கை

ஜப்பானிய பிரஜைகள் இருவரை பணயக்கைதிகளாக பிடித்துவைத்துள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அவர்களை கொலைசெய்யப்போவதாக விடுத்துள்ளமிரட்டல்கள் மன்னிக்கமுடியாதவை என ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.
கப்பம் செலுத்தாவிட்டால் இருஜப்பானிய பணயக்கைதிகளையும் கொலைசெய்துவிடப்போவதாக எச்சரிக்கும் வீடியோவை குறிப்பிட்ட அமைப்பு வெளியிட்ட பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட வீடீயோவில் தமக்கு எதிராக இராணுவநடவடிக்கை எடுத்துவரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஜப்பானை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.
சின்சோ அபே இது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளதுடன் குறிப்பிட்ட அமைப்பினரிற்கு எதிராக போராடபோவதாகவும், பணயக்கைதிகளை மீட்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பணயக்கைதிகளின் உயிர்கள் முக்கியம் அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதேNவேளை தனது நாடு பயங்கரவாதத்திற்கு அடிபணியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தனியார்இராணுவ நிறுவனமொன்றுடன் ஓப்பந்தம் செய்வதற்காக சிரியா சென்ற இரு ஜப்பானியர்களே பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.