செய்திகள்

ஜம்முவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற ஆர்.எஸ்.எஸ். திட்டமாம்

தீவிரவாதிகளை ஒழிக்க தீவிரவாதத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்ற தொனியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் பரிக்கர் தெரிவித்திருப்பதானது முஸ்லிம்களை ஜம்முவிலிருந்து வெளியேற்றுவதான ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சியின் ஒருபகுதியே என்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா கடுமையாக சாடியுள்ளார்.

இன்று நடைபெற்ற சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில் ஒன்றில் பேசியபோது இவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

“பாதுகாப்பு அமைச்சர், தீவிரவாதிகளைக் கொண்டே தீவிரவாதிகளைக் கொல்வோம் என்று பேசினார். இதற்கு என்ன அர்த்தம்? ‘இக்வானிகளுக்கு’ (அரசு ஆதரவு துப்பாக்கி படை) மறுபிறப்பு அளிப்பதே அவரது பேச்சின் அர்த்தம்.

பாதுகாப்பு அமைச்சரின் இத்தகைய பேச்சுக்குப் பிறகு சோபோரில் நிலவரத்தைப் பாருங்கள். யாராவது கொலை செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் அங்கே. இந்த அரசினால் நடைபெறுவதே இது.

அதிகார பசியினால் நான் பிடிபி-க்கு ஆதரவு அளிக்காமல் இல்லை. நான் 6 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்து விட்டேன், எதிர்கட்சியாக அமர தயாராகவே இருக்கிறேன். ஆனால் முதல்வர் முப்தி மொகமது சயீது யாருடன் கை கோர்த்துள்ளார்? ஆர்.எஸ்.எஸ். இம்மாநிலத்துக்கு கொடும் நஞ்சாகும். அது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இப்போதெல்லாம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. வன விளைபொருட்களை இன்று பலர் கொள்ளை அடிக்கின்றனர். இது காஷிமீர், லடாக், கார்கில் மற்றும் ஜம்முவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் விசாரணையை தொடங்கும் போது ஜம்முவின் சில பகுதிகளை மட்டும் குறிப்பிடுகிறீர்கள்.

ஏன்? இதன் காரணம் நிச்சயம் தெரியும். முஸ்லிம்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் அஜெண்டாவாகும் அது. இதுதான் அவர்கள் அரசியல். நாங்கள் இதனை வெற்றியடைய அனுமதிக்கப் போவதில்லை.

எங்கள் காலத்தில் மாநிலத்துக்கு இரண்டு தலைநகரங்கள் இருந்தன. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர். ஆனால் இப்போது ஒரே தலைநகர்தான். அது நாக்பூர். எந்த முடிவும் இங்கு எடுக்கப்படுவதில்லை. முதலில் நாக்பூரில்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சயீதுக்கு மக்கள் 28 இடங்களை இதற்காகவா அளித்தார்கள்?

நாங்கள் சுற்றுலாப்பயணிகளை இங்கு கொண்டு வந்தோம். சயீத் வெள்ள அறிக்கை வெளியிட்டார், சுற்றுலா காலியானது. எந்தப் பயணியும் விடுதிகளிலோ, ஷிகாராக்களிலோ தங்குவதில்லை. ஒருவரும் இங்கு வருவதில்லை, ஆனால் சயீத் மும்பை சென்று நடிகர் ஷாரூக் கானை இங்கு அழைத்து வருகிறார்.

இங்குள்ள பிரச்சினைகளுக்கு ஷாரூக் கான் தீர்வு என்று அவர் நினைக்கிறார் போல் தெரிகிறது. இது உண்மையெனில், ஷாரூக்கானை முதல்வராக செய்திருகலாம் என்று நானே பரிந்துரைப்பேன் அல்லவா? சயீதின் பயன் பின் என்னவாம்?

2002-ம் ஆண்டு இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைப்பதாக சயீத் கூறினார், அந்த 2002ம் ஆண்டு சயீது இப்போது எங்கே போனார்? முசாபராபாத் பாதையை திறப்பேன் என்றார், அவர் எங்கே இப்போது?

அப்போது இந்தியாவையும் பாகிஸ்தானையும் அப்போது ஒன்று சேர்க்க முடிந்தது என்றால் அந்த மேஜிக் இப்போது எங்கே சென்றது? இப்போதெல்லாம் அவர் பேசுவது கூட இல்லை.

இன்று நாங்கள் எங்கள் மவுனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். பிரதமர் மோடி இம்மாநிலம் குறித்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் நாங்கள் இன்று தெருவில் இறங்கி போராடுகிறோம். இம்மாநில மக்களுக்கு அவர் வாக்குறுதி அளித்தார், அவர் அதனை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.