செய்திகள்

ஜயலலிதா பிரதமருக்கு கடிதம்…

குவைத்துக்கு வேலைக்கு சென்ற நிலையில் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 10 தமிழக மீனவர்கள் உட்பட 11 பேரையும் உடனடியாக அங்கிருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் ஜெயலலிதா மேலும் குறிப்பிடுகையில், ‘ ஆறு மாதங்கள் மீன்பிடிப்பதற்கான நிபந்தனைப்படி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் என 11 பேர் கடந்த வருடம் ஜூலை மாதம் குவைத் சென்றனர். அங்கு அவர்களுக்கு உரிய பங்கு வழங்கப்படவில்லை. இதனால் பாரிய சிரமங்களுக்கு முகம்கொடுத்த குறித்த மீனவர்கள், தமது குடும்பத்தினருக்கு நீண்ட காலம் பணம் அனுப்பவும் இல்லை’.

இதனால், தங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி கோரியதும், அதற்கு வேலை ஏற்பாட்டாளர்கள் மறுத்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த முறைப்பாட்டின்படி, அந்நாட்டு பொலிஸார் பொய் வழக்கு பதிவு செய்து 11 மீனவர்களையும் கைது செய்தனர்.

ஒரு மாதத்திற்குப் பிறகு மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், மீனவர்களின் கடவுச் சீட்டை வேலை ஏற்பாட்டாளர்கள் தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். இதன் காரணமாக மீனவர்களால் குவைத்தில் மீன்பிடி தொழில் செய்யவோ, இந்தியாவுக்கு திரும்பவோ முடியாத ஒரு நிலை ஏற்பாட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும்படி குவைத்தில் உள்ள தூதரகத்துக்கு இந்திய வெளியுறுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தும்படி தாங்கள் உத்தரவிட வேண்டும். மீனவர்களுக்கான நியாயமான ஊதியம் கிடைக்கவும் மிக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

N5