செய்திகள்

ஜி.கே. வாசனுக்காக 20 இடங்களை விட்டுக்கொடுத்துள்ளேன்: விஜயகாந்த்

தேமுதிக மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஜி.கே.வாசனுக்காக தான் 20 இடங்களை விட்டுக்கொடுத்ததாகவும் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற தேமுதிக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், விவசாயிகளையும் நெசவாளர்களையும் தனது இரு கண்களாக மதிப்பதாகக் கூறினார். தேமுதிக மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 6 கட்சித் தலைவர்களும் ஒருவர் தவறை மற்றொருவர் சுட்டிக்காட்டுவர் என்று கூறிய தேமுதிக தலைவர், தங்கள் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது என்றார். அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்தினரை அமைதிப்படுத்த விஜயகாந்த் முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது.

புதிய வாக்காளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் போடும் வாக்குகள் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் என்று கூற நினைத்த விஜயகாந்த் அதனை மாற்றிக் கூறினார்.

சட்டப்பேரவைத் தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் யுத்தம் என்று தெரிவித்த விஜயகாந்த், இதில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி நிச்சயம் வெல்லும் என்றார்.

N5