செய்திகள்

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 38வது சிரார்த்த தின நிகழ்வு

அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் தலைவரும், மாபெரும் சட்டமேதையுமாகிய அமரர் ஜீ.ஜீ பொன்னம்பலத்தினது திருவுவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை காலை குருநகரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஜீ.ஜீ அவர்களது பேரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பளார் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மலர்மாலை அணிவித்தனர். தொடர்ந்து அகவணக்க நிகழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நினைவுக் கூட்டமும் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாள்கள் கலந்து கொண்டிருந்தனார். கட்சியின் தலைவர் இ.எ.ஆனந்தராஜா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

GG 2 GG 4 GG3