செய்திகள்

ஜுனில் பொதுத்தேர்தல் தயாராகுமாறு சு.க.வினருக்கு சுசில் பணிப்பு

எதிர்வரும் பொதுத்தேர்தல் ஜூன் மாதம் இடம்பெறுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலநறுவையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்காக ஆயத்தமாகுமாறும் தேர்தலுக்காக ஒன்றிணைந்து அனைவரும் செயற்படுமாறும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எப்படியிருப்பினும் இவ்வாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் அடுத்த மாதம் தேர்தல் இடம்பெறவேண்டும். அதற்கமைய ஜூன் மாதம் தேர்தல் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.