செய்திகள்

ஜுன் நடுப்பகுதியிலேயே பாராளுமன்றம் கலையும் தேர்தல் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடக்கும்

பராளுமன்றம் எதிர்வரம் ஜுன் மாத நடுப்பகுதியியே கலைக்க்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ஆகஸ்ட் நடுப்பகுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த வாராத்தில் தேர்தல் திருத்தத்திற்கு அமைச்சரவையின் ஆதரவை பெற்ற பின்னர் அதனை பாராளுமன்றத்தில் அதனை சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கும் மற்றும் அதன் பின்னர் கடந்த 100நாள் காலப்பகுதியில் நிறைவேற்ற முடியாது போன சட்ட திருத்தங்களை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கையெடுக்கப்பட்ட பின்னரே பாராளுமன்றத்தை கலைப்பேன் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதாகவும் இதனை அடிப்படையாக கொண்டே அடுத்த மாத நடுப்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.