செய்திகள்

ஜுலை 3 இல் கதிர்காம ஆலய திருவிழா ஆரம்பம்

கதிர்காம ஆலயத்தின் திருவிழாவுக்கான தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஜுலை 3ம் திகதி முதல் திருவிழா ஆரம்பிக்கப்படவுள்ளது.
3ம் திகதி கொடியேற்றத்துதடன்  ஆரம்பமாகும் திருவிழா 31ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை 17ம் திகதி முதல் பெரேகரா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அத்துடன் 28ம் திகதி தீ மிதிப்பு நிகழ்வின் பின்னர் ரந்தோலி பெரகரா 31ம் திகதி வீதியுலா வந்த பின்னர்  நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.