செய்திகள்

ஜூலை 10க்குள் பாராளுமன்றத்தை கலைத்தாலே செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த முடியும்

எதிர்வரும் செப்படம்பர் மாதத்திற்குள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென்றால் ஜூலை 10ம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென  தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஜூலை 10ம் திகதிக்குள் பாராளுமன்றத்தை கலைத்தால் ஆகஸ்ட் இறுதியில் தேர்தலை நடத்த முடியும் அதன்படி செப்டம்பருக்குள் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பாராளுமன்றத்தை கலைத்தல் மற்றும் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் அதிகாரம் ஜனாதிபதி வசமெ இருக்கின்றது. இதன்படி அவர் குறித்த தினத்துக்குள் தேர்தலுக்கான அறிவிப்பை விடுத்தால் ஆகஸ்ட் இறுதியில் தேர்தல் நடக்கலாம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.