செய்திகள்

ஜெனிவா பிரச்சினைக்கு மஹிந்தவே காரணம் : எஸ்.பி.திஸாநாயக்க

இலங்கைக்கு எதிரான  ஜெனிவா பிரச்சினைகள் தலைத்தூக்க  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் காணப்பட்ட பலவீனமே காரணமென  கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரவித்துள்ளார். கண்டியில் நேற்று அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை  சந்தித்த பின்னர் ஊடககவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
19வது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் ஜெனிவா பிரச்சினைகளை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கிணங்கவே நாம் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டோம். அன்று ஜெனிவா பிரச்சினை தலைத்தூக்குவதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் காணப்பட்ட பலவீனமே காராணமாகும் .
அவரே அந்த நிலைமைக்கு காரணம். யுத்தத்தின் பின்னர் அதிக நன்மைகளை வடக்கு மக்களே பெற்றனர் ஆனால் அந்த மக்களின் மனங்களை வெற்றிக்கொள்ள எம்மால் முடியாது போனது. என அவர் தெரிவித்துள்ளார்.