செய்திகள்

ஜெனீவாவில் தமிழ் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

ஜெனீவா மனித உரிமைகள் சபை முன்றலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இன்று திங்கள்கிழமை பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.

ஐ. நா. விசாரணை அறிக்கை பின்போடப்பட்டமையை கண்டித்தும் தமிழ் மக்கள் தமது எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் வகையில் சர்வதேச சமூகத்தினால் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அநீதியை வெளிக்கொணரும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவப்பொம்மையையும் ஆர்ப்பட்டக்காரர்கள் எரித்தார்கள்.

ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் எராளமான தமிழர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 

UN Un2