செய்திகள்

ஜெனீவாவை நோக்கி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

எதிர் வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் ஐ. நா . மனித உரிமைகள் சபை கூட்டத்தொடர் நடைபெறும்போது மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தி எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி இந்த பேரணி நடைபெறும். ஜெனீவா தொடரூந்து நிலையத்துக்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐ. நா. முன்றலில் நடைபெறவிருக்கும் இந்த பேரணியில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ளவேண்டும் என்று இந்த பேரணியை ஒழுங்குசெய்துள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.