செய்திகள்

ஜெனீவா சென்றடைந்தார் மங்கள: மனித உரிமை ஆணையாளருடன் நாளை பேச்சு

சீனா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,அங்கிருந்து சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்று அதிகாலை ஜெனீவா சென்றடைந்த அவர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹூசைனை நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, இலங்கையில் மனித உரிமைகளின் நிலை மற்றும் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், நல்லிணக்க செயற்பாடுகளை பலப்படுத்துவதற்காக மேற்கொண்ட திட்டங்கள் தொடர்பில், ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்தவுள்ளார்.