செய்திகள்

ஜெயலலிதா பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி உள்ள ஜெயலலிதா மீண்டும் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஜெயலலிதா உடனடியாக பதவியேற்பார் என்று எதிர்பர்க்கபப்ட்டபோதிலும், அவர் உடனடியாக பதவியேற்கவில்லை. அனேகமாக வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

முன்னர் முதலமைச்சராக இருந்தபோது சென்னை தலைமை செயலகத்தில் ஜெயலலிதா ஏற்கனவே இருந்த முதல்வருக்கான அலுவலக அறை தற்போது ஜெயலலிதாவுக்காக தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.