செய்திகள்

ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதுவது கண்துடைப்பு நாடகம்: மீனவர்கள் குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதுவது கண்துடைப்பு நாடகம் என மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்போது இலங்கைச் சிறைகளில் தமிழக மீனவர்கள் 96 பேரும் அவர்களது படகுகள் சிறைபிடிக்கப் பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இவற்றை மீட்கும் எந்த முயற்சியிலும் அக்கரை காட்டாமல் மத்திய மாநில அரசுகள் மவுனமாக இருப்பதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் நேரங்களில் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுவது தேர்தல் ஓட்டுக்கு போடும் நாடகம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை கண்டிக்கும் விதமாக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கபோவதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.

N5