செய்திகள்

ஜெயலலிதா பிறந்த நாள் : ஏட்டிக்கு போட்டியாக அமைச்சர்கள் சீர்வரிசை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அறநிலையத்துறைக்குட்பட்ட 969 சிவன் கோயில்களில் வில்வ மர கன்றுகள் நடப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இதைதொடர்ந்து தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க, அவரது 67வது பிறந்தநாளை முன்னிட்.டு கோயில் ​களில் பூஜை, பரிகாரங்கள் செய்யப்பட்டன. தங்கத் தேர் இழுக்கப்பட்டன. ஏழை எளியவர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டன. தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் 113 ஜோடிகளுக்கு வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் 72 வகை சீர்வரிசைகள் கொடுத்தார். அத்துடன் பசுவும் கன்றும் வழங்கி திருமணம் செய்து வைத்தாராம்.

வைத்திலிங்கம் ரகசியமாக ஏற்பாடு செய்வதைக் கேள்விப்பட்ட அமைச்சர் காமராஜும் தன் பங்குக்கு திருவாரூரில் 104 ஜோடிகளுக்கான சீர்வரிசை​களுடன் பசுவும் கன்றும் கொடுத்து தன்னுடைய விசுவாசத்தை காண்பித்தார்.