செய்திகள்

ஜெயலலிதா வழக்கு: ஒரு வாரத்தில் கர்நாடக அரசு அப்பீல்

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்திற்குள் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதாவை மக்கள் பிரதிநிதி அந்தஸ்தில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கோரவும் அரசு தரப்பு முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று கர்நாடக சட்ட அமைச்சை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை கர்நாடக ஹைகோர்ட் கடந்த மாதம் 11ம் தேதி அளித்த தீர்ப்பில் தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா குற்றம் செய்யவில்லை என்று ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்திருந்தார்.