செய்திகள்

ஜெயலலிதா வழக்கு : கர்நாடக அரசு நாளை மேன்முறையீடு செய்யாது

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், நாளை அவ்வாறு மேன் முறையீடு செய்யப்படாது என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்த ஆவணங்கள் டெல்லியில் உள்ள கர்நாடக பவனிற்கு சரிபார்க்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆவணங்களின் நகல்களை தயாரிக்கவே 5 நாட்கள் ஆகக்கூடும், ஆதலால் , எப்பொழுது மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அவர் தெரிவித்துளார்.