செய்திகள்

ஜெயலலிதா விடுதலை அதிர்ச்சி அளிக்கிறது; ஆனால் அப்பீல் செய்ய மாட்டேன்: சுப்பிரமணிய சாமி

கர்நாடக உயர்நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாஉட்டபட நான்கு பேரையும் விடுதலை செய்துள்ளமை பெரிதும் அதிர்ச்சி அளிப்பதாகவும், இருந்தபோதிலும் அதனை எதிர்த்து தானாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரபோவதில்லை என்றும் சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். இதேவேளை, கர்நாடக அரசுத் தரப்பில் அப்பீல் செய்தால் அவர்களுக்கு தான் உதவி செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பை முதலில் வெளிக்கொண்டு வந்திருந்தவர் சுப்பிரமணிய சாமி. அத்துடன், இந்த வழக்கின் மனு தாரரும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.