செய்திகள்

ஜெய் ஆகாஷின் “நான் யார்?”

ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் மற்றும் ராகம் புரொடக்‌ஷன் இணைந்து தயாரிக்கும்,  ஜெய் ஆகாஷின் “நான் யார்?” படத்தில் ஜெய் ஆகாஷ் நாயகனாகவும் லண்டன் மாடல் அழகி பிரியா நாயகியாகவும் தோன்றுகிறார்கள்.

இவர்களுடன் சுஜித்,சுமன் ஷெட்டி, ஜான்சன், Y.இந்து, சோனியா சர்மா, தேவந்தி, நகினா, ராதா, எட்வர்ட் ஒயிட் இகிரேக் தாமஸ்  மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கம்ப்யூட்டர் தொழில்நுட்ப விஞ்ஞானி சிவாவுக்கு லண்டனில் வேலை கிடைக்கிறது. புதிதாக திருமணம் முடித்த மனைவியுடன் லண்டனுக்குச் சென்று சந்தோஷமாக ஊர் சுற்றிப் பார்க்கிறான். இந்த நேரத்தில் எதிர்பாராமல் ஒரு விபத்து நடக்க, நூலிழையில் உயிர் தப்புகிறான். அந்த விபத்துக்குப்பிறகு சிவாவின் பேச்சு, நடவடிக்கைகள் முற்றிலும் மாற்றமடைகின்றன.
தன்னுடைய பெயரை மட்டும் சிவா என்று சரியாக சொல்பவன், புதிய மொழிகளைப் பேசுவதும் வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமாக இருக்கிறான். பூப்போன்ற இதயத்துடன் இருந்த சிவா, புயல் போன்ற ஆக்ரோஷ இளைஞனாக மாறுகிறான். குறிப்பிட்ட சில ரவுடி கும்பலை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறான்.

naan yaar stills 19

அப்பாவியாக இருந்தவன் அதிரடியாக மாறியது ஏன் என்பதுதான், ‘நான் யார்’ படத்தின் கதை. ஸ்பிலிட் பெர்சனாலிட்டி, ஆவி போன்ற சமாச்சாரங்கள் இல்லாமல் யாரும் எதிர்பாராத புதிய திருப்பம் கதையில் இருக்கிறது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டன், பாரிஸ் நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளன. கார் மற்றும் ஹெலிஹாப்டர் சேஷிங் காட்சிகள் இடம் பெறுகின்றன. ஜாய்மதி நடனம் அமைக்கிறார். இந்தப் படத்தின் பாடல்களை கபிலன் எழுத இசை அமைக்கிறார் யு.கே.முரளி.

தொழில் நுட்பக் கலைஞர்கள்

கதை – திரைக்கதை : ஜெய் ஆகாஷ்
வசனம் – இயக்கம் : என்.ராதா
ஒளிப்பதிவு : தேவராஜ் / ஷான் சாயு
இசை : U.K.முரளி
பாடல்கள் : கபிலன் / ராக்கிங் ஜாக்
எடிட்டிங் : சாம்ராட்
மக்கள் தொடர்பு : S.செல்வரகு
நிர்வாகத் தயாரிப்பு – S.ஜான்சன்

naan yaar stills 11

naan yaar stills 12